கேதார்நாத் கோயிலை நிர்வகிக்கும் சர்தாம் தேவஸ்தான வாரியம் கலைப்பு: உத்தரகாண்ட் அரசு முடிவு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பாஜ ஆட்சியின்போது, சார்தாம் தேவஸ்தான நிர்வாக சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், இம்மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உட்பட 51 முக்கிய கோயில்களின் நிர்வாகம், இதன் கீழ் கொண்டு வரப்பட்டது. இதற்கு கோயில் பூசாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், ராவத்தை தொடர்ந்து இம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற புஷ்கர் சிங் தாமி, தர்தாம் தேவஸ்தான வாரியத்தை கலைத்து சட்டத்தை ரத்து செய்தார்.

Related Stories: