மழை வெள்ளத்தால் பாதிப்பு பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வெள்ளநிவாரண பொருட்கள், உணவு ஆகியவை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் தொகுதி, வெங்கத்தூர் ஊராட்சி வெங்கத்தூர் கண்டிகையில் மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய  திமுக இளைஞரணி சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே.திராவிடபக்தன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைத் தலைவர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், ஊராட்சி துணைத் தலைவருமான ஆர்.மோகனசுந்தரம், கொப்பூர் டி.திலீப்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துக் கொண்டு, பழங்குடியின மக்களுக்கு மழை வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், செங்குட்டுவன், தா.குமார், ஏ.எஸ்.மணி, கடம்பத்தூர் வி.ராஜசேகர், வழக்கறிஞர் பி.கே.நாகராஜ், தாடி நந்தகோபால், ஆர்.ராஜேந்திரகுமார், சி.ஆர்.குமரன், காஞ்சிப்பாடி சரவணன், அஸ்வின்காந்த், கிளை நிர்வாகிகள் டி.ஆனந்த், டில்லி, ராமதாஸ், ராயப்பன், பஞ்சாட்சரம், அருண், எல்லப்பன், டி.வி.முருகன், வாசு, ஆர்.கார்த்திக், குமார், முத்து, கோபி, ராஜேஷ், ரமேஷ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: