பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 21,030 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

திருவள்ளூர்: பூண்டி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 19750 கன அடியாக குறைந்தது. இதையொட்டி, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 21030 கன அடி வெளியேற்றப்படுகிறது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்துக்கான நீர் வரத்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 19,750 கன அடியாக குறைந்தது. ஆனால் உபரிநீர் வினாடிக்கு 21,030 கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் மழைநீர் வரத்து மற்றும் ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணையில் இருந்து நகரி ஆறு வழியாக திறந்துவிடப்பட்ட உபரி நீர், பூண்டி சத்யமூர்த்தி சாகர் நீர்தேக்கத்துக்கு சென்றடைந்தது.

நீர் வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 19,750 கன அடியாக குறைந்து வந்தது. ஆனால் பூண்டி நீர்த்தேக்கத்தின் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வினாடிக்கு 21,030 ஆயிரம் கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது 34.31 அடி உயரத்துக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது 2921 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால், பாதிப்பு ஏற்பட கூடாது. எனவே, கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: