சட்டதினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சார்பில் அரசியல் அமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு சட்ட உறுதிமொழி ஏற்புரை, சங்க நூலகத்துக்கு மக்களவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சட்ட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்பி செல்வம் தலைமை தாங்கி ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் ஜான், செயலாளர் துரைமுருகன், துணைத் தலைவர் சிட்டிபாபு, பொருளாளர் சரவணன், நூலகர் விஜயகுமார், மூத்த வழக்கறிஞர்கள் ரவிசந்திரன், ரவிக்குமார், சிவகோபு, சத்தியமூர்த்தி, சுப்பிரமணி, ரமேஷ்குமார், நரேந்திரகுமார், வடிவேல், உதயன், சின்னராஜ், நரசிம்மன் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பிரதீப்குமார், ஜோசப்சுந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: