ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை; தமிழக மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமிக்ரான் வைரஸ், பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு உலக அளவில் பரவக் கூடிய நோய்த்தொற்று என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இச்சூழல் மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல என்பதை பொதுமக்களும் நன்கு உணர்ந்து தொற்று பரவாமல் தடுப்பதற்கு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட செயல்களை தொடர்ந்து செய்து தங்கள் சுய பாதுகாப்பையும், குடும்பத்தின் பாதுகாப்பையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். 

Related Stories:

More