×

குற்றாலத்தில் 3வது நாளாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்றிரவு விடிய, விடிய பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் இன்று 3வது நாளாக அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் படிகளில் தண்ணீர் வழிந்தோடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்ததால், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் மெயினருவியில் தடாகம் மற்றும் பாலத்தை தாண்டி தண்ணீர் ஆக்ரோஷமாக விழுந்தது.

ஐந்தருவியில் 5 பிரிவுகளும் இணைந்து ஒரே பிரிவாக கொட்டியது. பழைய குற்றால அருவியிலும் படிக்கட்டுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் விழுகிறது. இன்று காலை மழை இல்லாததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Courtallam , Flooding of waterfalls on the 3rd day in Courtallam
× RELATED குற்றாலத்தில் ஒரு வாரமாக...