×

காந்தி ஆசிரம டைரியில் சல்மான் எழுதியது என்ன?.. குஜராத் திடீர் விசிட்டால் பரபரப்பு

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள காந்தி ஆசிரமம் வந்த சல்மான்கான் அங்குள்ள பார்வையாளர்கள் டைரியில் எழுதியது, தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வந்தார். அங்கு அவர் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை பார்வையிட்டு, அதனை இயக்கிப் பார்த்த ார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளன.

திடீரென காந்தி ஆசிரமத்திற்கு வந்த சல்மான் கான், அங்குள்ள பார்வையாளர்கள் டைரியில் சில கருத்துகளை குறிப்பிட்டு எழுதினார். அவருக்கு காந்தி ஆசிரம நிர்வாகம் சார்பில் கொத்து நூல் பரிசாக வழங்கப்பட்டது. அதனை அவர் தனது கையில் சுற்றிக் கொண்டார். பார்வையாளர்கள் டைரியில் சல்மான் கான் எழுதியதில், ‘நான் இங்கு வந்துள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒருபோதும் மறக்க முடியாத இடமாக உள்ளது. நூற்பு இயந்திரத்தை காந்தி பயன்படுத்தினார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகும். தேசத் தந்தை காந்திஜியின் ஆன்மாவுக்கு இந்த இடம் அமைதி தரும். மீண்டும் நான் இங்கு வருவேன். அப்போது இங்கு நிறைய கற்றுக்கொள்வேன். அன்புடன் சல்மான்கான்’ என்று குறிப்பிட்டுள்ளார். சல்மான்கான் காந்தி ஆசிரமம் வந்து சென்றதால், அகமதாபாத்தில் அவரது ரசிகர்கள் நூற்றுக் கணக்கில் குவிந்திருந்தனர்.

Tags : Salman ,Gandhi Ashrima ,Gujarat , What did Salman write in the Gandhi Ashram diary?
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்