×

வங்கக்கடலில் உருவாகிறது புயல்... உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. .. அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!!

சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்தது. இதுதவிர மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. வட கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்தது.

சென்னையில் காலை, மதியம், இரவு என விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சென்னை நகரில் பல இடங்கள் இன்னும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அந்தமான், நிகோபார் தீவுகள், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்று கூறிய வானிலை ஆய்வு மையம், அரபிக் கடலின் கிழக்குப் பகுதியில் மராட்டிய கரையோரம் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்து. 


Tags : Bay of Bengal ,Arabian Sea , பருவமழை
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...