×

ஓமிக்ரான் அச்சுறுத்தல் ...தென் ஆப்ரிக்காவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் : இந்திய அரசு

டெல்லி : ஓமிக்ரான் அச்சுறுத்தலால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் பற்றி உலகமே அச்சத்தில் உள்ளது. இது தென் ஆப்ரிக்காவில் வேகமாக பரவி வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்திய தயாராக இருப்பதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகள், சோதனை கருவிகள், செயற்கை சுவாசக்கருவி போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறியுள்ளது.

இதனிடையே அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மராட்டியம் மற்றும் கேரளாவில் இருந்து பெங்களூரு செல்லும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Omicron ,South Africa ,Government of India , ஓமிக்ரான்
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...