சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்க நோட்டீஸ்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

திருச்சி: தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 469 குடும்பங்களுக்கு அரசு சார்பில் பாத்திரம், உடைகள், இலவச காஸ் சிலிண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: 2015க்கு பிறகு தமிழகத்தில் தற்போது பெரிய அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிகளை கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கும் பொதுப்பணித்துறை அமைச்சகத்திடமிருந்து விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவற்றை இடிக்க நோட்டீஸ் தரப்படும்.  மேலும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களில் மாணவ, மாணவிகள் அமர்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More