தமிழக அரசுக்கு திருமாவளவன் பாராட்டு

அரியலூர்: மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என திருமாவளவன் தெரிவித்தார். அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று அளித்த பேட்டி:  தொடர் மழையினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழக முதல்வரே நேரிடையாக களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

வரும் காலங்களில் இதுபோன்று சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் தனியாக ஒரு ஆணையம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு, விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: