ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 16 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான நடைபெற்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலா 8 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் வெற்றி ெபற்ற காங்கிரஸ்  கவுன்சிலர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவை சேர்ந்த ரஞ்சிதா ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்று  செயல்பட்டு வருகிறார். பல்வேறு காரணங்களாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஒன்றியக்குழு துணை தலைவர் தேர்தல் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஊராட்சி செயலருமான கென்னடி பூபாலராயன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு மட்டும் அலுவலகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்‌. ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கு  திமுக சார்பில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திலகவதி ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்‌. அவரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் அம்மு சேகர் அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் போட்டியிட்டதால்  உச்சகட்ட பரபரப்பு நிலவியது. ரகசிய வாக்கெடுப்பில் திமுக சார்பில் போட்டியிட்ட திலகவதி ரமேஷுக்கு 9 வாக்குகளும் அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் போட்டியிட்ட அம்மு சேகருக்கு 7 வாக்குகள் மட்டுமே பதிவானது.

இந்நிலையில் திலகவதி ரமேஷ் ஒன்றிய குழு துணை தலைவராக வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கென்னடி பூபாலராயன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவராக வெற்றி பெற்றதற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி எஸ்.சந்திரன் எம்எல்ஏ வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆர்.கே.பேட்டை ஒன்றிய திமுக செயலாளர்கள் பழனி சண்முகம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரகு பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரா திருத்தணி நகர பொறுப்பாளர் வினோத்குமார் ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் சத்தியராஜ் சீராளன் செங்குட்டுவன் ரவி ராமசாமி சிலம்பு பன்னீர்செல்வம் உட்பட பலர்  வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: