×

கான்பூர் டெஸ்ட் : ஸ்போர்ட்டிங் ஆடுகளம் தயாரித்த மைதான குழுவுக்கு ரூ.35,000 பரிசளித்தார் ராகுல் டிராவிட்

கான்பூர் : ராகுல் டிராவிட் எப்பொழுதும் மற்றவர்களில் இருந்து வித்தியாசமானவர் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார் இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ஸ்போர்ட்டிங் ஆடுகளத்தை தயார் செய்ததற்காக சிவகுமார் தலைமையிலான கிரீன் பார்க் மைதான பிட்ச் தயாரிப்பாளர்களுக்கு ரூ.35,000 பரிசளித்து அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்த அஜாஸ் படேல் மற்றும் ரவீந்திரா ஆகியோர் மங்கலான வெளிச்சத்தின் கீழும், இந்தியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து சிறப்பாக விளையாடினர். டெஸ்டின் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து பரபரப்பான டிராவை செய்தனர்.

ஆட்டம் முடிந்த பின் உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எங்கள் மைதான பிட்ச் தயாரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரூ.35,000 பரிசளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

விளையாடிய காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் ஜென்டில் மேன் என பெயரெடுத்த ராகுல் டிராவிட் தற்போதும் மாறவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பரிசு இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், 3 நாட்களில் ஆட்டம் முடியும்படியான பிட்சை தயார் செய்யாமல் ஸ்போர்ட்டிங் ஆடுகளத்தை தயார் செய்ததற்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanpur ,Rahul Dravid ,Sporting ,Ground , Rahul Dravid
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...