×

குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாமல் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதால் எந்த பயனும் இல்லை: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாமல் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதால் எந்த பயனும் இல்லை என்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து டி.ஆர்.பாலு பேசியதாவது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். விளைபொருட்களுக்கான ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவர வேண்டும். ஆனால் வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதித்துவிட்டு நிறைவேற்றுவதாக கூறிவிட்டு விவாதமின்றி நிறைவேற்றி உள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஒன்றிய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. நீங்கள் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்காமல், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. வேறுவழியின்றி 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் நிச்சயம் உங்கள் கூட இருக்கும். ஆனால் அதே நேரத்தில் எம்.எஸ்.பி. என்று சொல்லப்படுகின்ற குறைந்தபட்ச ஆதார விலையை விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுக்காமல் 3 வேளாண் சட்டங்களை மட்டும் ரத்து செய்வதால் எந்த பயனுமில்லை என்று குறிப்பிட்டார்.

Tags : D. R. ,Palu , Agricultural Law, Withdrawal, D.R.Palu
× RELATED பிரதமருக்குதான் தூக்கம்...