×

தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் வகை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: ஐசிஎம்ஆர்

டெல்லி: தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் வகை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று இந்தியமருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் வீரியமிக்க வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல், கண்காணிப்பை அதிகரித்தல், மேம்பட்ட சோதனை, ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காணுதல், தடுப்பூசி வேகத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐசிஎம்ஆர் தொற்று நோயியல், தொற்று நோய்கள் துறை தலைவர் சாமிரான்பான்டா; இந்த புதியவைரஸில் கண்டறியப்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள் கவலை அளிக்கக் கூடியதாக இல்லை. இது ஆபத்தானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தும் அவசியமும் இல்லை என்று தெரிகிறது. தற்போது வரை அத்தகைய செய்திகளோ, தரவுகளோ எதுவும் வரவில்லை. இந்த புதிய வகை வைரஸ் பாதிப்புகளின் வீரியம் தொடர்பான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வரும் நிலையில் அது ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கு தொற்றுவது என்பது பழைய முறையிலேயே உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சமூக இடைவெளி, தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றால் இதைத் தடுக்க முடியும் என கூறினார்.


Tags : South Africa , The public should not be alarmed by the new Omigron virus found in South Africa: ICMR
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...