×

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் கொரோனா பரவுவது அதிகம்: WHO எச்சரிக்கை

ஜெனீவா: ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா வகை கொரோனாவை போல ஒமைக்ரானும் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பது இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதால் இந்த வைரஸ் மற்ற வைரஸ்களை விட வீரியமிக்கதா என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஒமைக்ரான் பரவலை தற்போது பயன்படுத்தப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையிலேயே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது. டெல்டா உள்ளிட்ட வகைகளுடன் ஒப்பிடுகையில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் கொரோனா பரவுவது முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : WHO , Omicron, Corona
× RELATED எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல...