ஏர்டெல், ஜியோ பிரீபெய்டு சேவை கட்டணம் அதிகரிப்பு : BSNL நிறுவனத்திற்கு ‘மாறுவோம்'என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் இணையவாசிகள்

மும்பை: இந்தியாவில் செல்போன் சேவை வழங்குவதில் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் முன்னணி வகித்து வருகின்றன. இவர்களுக்கு போட்டியாளர்கள் இவர்கள் மட்டுமே என்பதால் தங்கள் தேவைக்கேற்பே செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்திக் கொள்கின்றன. கடந்த வாரம் ஏர்டெல் நிறுவனம், பிரீபெய்டு சேவை கட்டணத்தை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து வோட போன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. ஏர்டெல், வோடபோன், ஐடியாவை தொடர்ந்து ஜியோவும் அதிரடியாக விலையை உயர்த்தியது. பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இதனால் இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ நோக்கி வாடிக்கையாளர்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், BSNL நிறுவனத்திற்கு மாறுவோம் என இணையவாசிகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #BoycottJioVodaAirtel #BSNL என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வரும் இணையவாசிகள், கட்டண உயர்வில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் BSNLக்கு மாறுவதுதான் ஒரே வழி என பதிவிட்டு வருகின்றனர். இந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தால் நிச்சயம் ஒரு பெருங்கூட்டம் பிஎஸ்என்எல்-ஐ நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: