×

காஞ்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பெய்துவரும் தொடர் மழையால் பல்லவன்நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளிவர முடியாமல் பெரும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார். உடன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உடன் இருந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து இந்தத் தொடர் மழையால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பல்லவன் நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்தும்,சாலைகளிலும் மழைநீரானது தேங்கி நின்று வருகிறது.இதனால் அப்பகுதி மக்களும்,வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள், நிவாரண முகாம்கள், அரசு மருத்துவமனை , வெங்கச்சேரி செய்யாறு பாலம், தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ள செய்யாறு தரை பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு தடை செய்யப்பட்டுள்ள போக்குவரத்தை விரைவாக செயல்படுத்தும் வகையில் பணிகளை விரைவாக முடிக்க நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , பொதுப்பணித்துறை  சார்ந்த அலுவலர்கள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Kanchi District , Kanchi District, Rain Vulnerability, District Monitoring Officer
× RELATED உத்திரமேரூர் தனியார் கல்லூரியில் அமுத கலச யாத்திரை பேரணி