பத்தனம்திட்டா அருகே மயக்க மருந்து கொடுத்து மார்க்சிஸ்ட் நிர்வாகி பலாத்காரம்: டிஒய்எப்ஐ நிர்வாகி உள்பட 12 பேர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர் சஜி மோன்(44). திருவல்லா கோட்டாளி மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளராக உள்ளார். அதே  கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இளம்பெண் ஒருவர், மாவட்ட எஸ்பியிடம்  ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:  கடந்த மே மாதம்  கோட்டாளி கிளை செயலாளர் சஜிமோன், டிஒய்எப்ஐ நாசர் ஆகிய 2 பேரும்  பத்தனம்திட்டாவில் ஒரு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று  என்னை காரில் அழைத்து சென்றனர். அப்போது காரில் வைத்து நாசர் ஜூஸ்  கொடுத்தார். அதில் மயக்க மருந்து கலந்தது எனக்கு தெரியாது.

அதை குடித்ததும்  நான் காரில் மயங்கி விட்டேன். அப்போது 2 பேரும் சேர்ந்து என்னை  செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து  என்னை பலாத்காரம் செய்தனர். இதையடுத்து 2 பேரும் ஆபாச காட்சிகளை சமூக வலைதளதில்  பரப்பியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மீது  வழக்குப்பதிவு செய்ய திருவல்லா போலீசுக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து  சிபிஎம் கிளை செயலாளர் சஜி மோன், நாசர் உள்பட 12 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: