திரிபுரா உள்ளாட்சி தேர்தல் பாஜ அமோகம்

புதுடெல்லி: திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரிபுரா மாநிலத்தில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், 13 நகராட்சி கவுன்சில் மற்றும் 6 நகர பஞ்சாயத்துகளில் உள்ள 334 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 112 இடங்களில் பாஜ போட்டியின்றி வெற்றி பெற்றது. மீதமுள்ள 222 இடங்களுக்கு கடந்த 25ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் 183 இடங்களுக்கு மேல் பாஜ முன்னிலை வகித்தது. அகர்தலா மாநகராட்சியில் மொத்தம் 51 இடங்களில் 47 இடங்களில் பாஜ வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும், தேர்தலில் போட்டியிட்ட திரணாமுல் காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2023 சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை காட்டுவதாக அக்கட்சியின் பொது செயலாளர் குணால்கோஷ் தெரிவித்தார்.

Related Stories: