×

நீர்மட்டம் 142 அடியாக நீடிக்க நடவடிக்கை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது நிறுத்தம்

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்த, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1,847 கனஅடியாக இருந்தது. இதனால், அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட 2,300 கனஅடி நீர், 900 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து 900 கன அடியாக குறைந்ததால் மாலை 6 மணி முதல் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 141.65 அடி. 100 கனஅடி நீர் மட்டும் கேரளாவுக்கு திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 7,572 மில்லியன் கனஅடி.

Tags : Mullaiperiyaru dam , Water level, action, Mullaiperiyaru dam
× RELATED பென்னிகுக் 183வது பிறந்தநாள்; தமிழக அரசு...