குழந்தை பிறந்த 3வது நாளில் வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண் மீட்பு

சென்னை: மேற்கு தாம்பரம் அருகே உள்ள வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனிஷா பிரியா (28). இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்,  தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. மேல் சிகிச்சைக்காக, குழந்தை மட்டும் மருத்துவமனையில் இருந்தது. இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை எடுப்பதற்காக வீட்டிற்கு வந்த இவர்,   தனது வீட்டை சூழ்ந்த வெள்ளத்தில் பெற்றோருடன் சிக்கி தவித்தார். தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படகு மூலம் அவர்களை பத்திரமாக மீட்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

More