×

அமெரிக்காவில் படிக்கும் சிஎம்டிஏ பெண் அதிகாரி மகளுக்கு ஆபாச படங்கள் அனுப்பி ரூ.1.80 கோடி கேட்டு மிரட்டல்: போரூரை சேர்ந்தவர் அதிரடி கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணி (55), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சிஎம்டிஏ திட்டமிடல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது 25 வயது மகள் அமெரிக்காவில் படித்து வருகிறார். ராணி டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், அமெரிக்காவில் படித்து வரும் எனது மகளின் செல்போனுக்கு கடந்த 17ம் தேதி இரவு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த போது, எனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் அதிகளவில் இருந்துள்ளது. அதை பார்த்து எனது மகள் அதிர்ச்சியடைந்தார்.

உடனே மீண்டும் ஒரு மெசேஜில் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால் அமெரிக்க டாலர் மதிப்பில் 2.50 ஆயிரம் டாலர் பணம் கொடுக்க வேண்டும். இந்திய ரூபாயில் 1.80 கோடி ஆகும். இல்லை என்றால், உனது அந்தரங்க புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு உன்னிடம் கேட்ட தொகையை விட அதிக பணத்தை நான் சம்பாதித்துவிடுவேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.

புகாரின்படி டி.பி.சத்திரம் போலீசார் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அதில், போரூர்  லட்சுமி நகரை சேர்ந்த ரமேஷ் (51) என்றும், இவர் ராணியின் மகளுக்கு ஆபாசப்படங்களை அனுப்பி மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இவர், 1994ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவியும், புகார் அளித்த பெண் அதிகாரியும் பள்ளி தோழிகள். இந்நிலையில், பெண் அதிகாரி கடந்த 2020ம் ஆண்டு ரமேஷிடம் ரூ.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

மேலும், பெண் அதிகாரியின் மகள் அமெரிக்காவில் படிக்க ரமேஷ் உதவியுள்ளார். இதனால், கொடுத்த பணத்தை திருப்பி தராததால் கடந்த மாதம் சென்னை வந்த ரமேஷ், ஆபாச படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ரமேஷ் மீது ஐபிசி 185,506 (1), 507, 509, 354(சி) மற்றும் பெண்கள் வன்ெகாடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று முன்தினம் கைது  செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான ஆபாசப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : CMDA ,US ,Porur , 1.80 crore extortion threat to CMDA female daughter studying in US: Porur resident arrested
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...