×

டாஸ்மாக் போக தடுப்பூசி கட்டாயம்: அமைச்சர் தகவல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, அடையாறில் 12வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர்  மா.சுப்ரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேற்று துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எச்.எம். அசன் மெளாலானா, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து  கொண்டனர். அதைத் தொடர்ந்து அடையாறு ஆறு மற்றும் மல்லிப்பூ காலனிப்பகுதியில், வெள்ளதடுப்பு பணி மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு  குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: உலகளவில் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட விமான  நிலையங்களில் பரிசோதனையும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவெளியில் கலந்து கொள்வோர் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டிருப்பது  கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதுபானக் கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும். எனவே டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இதை கண்காணிக்க மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tasmag ,Minister , Vaccine forced to go to Tasmag: Minister informed
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...