×

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேங்கிய நீரால் பக்தர்கள் அவதி: அகழியின் தண்ணீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை: வரலாற்று சிறப்புமிக்க கோட்டை பாழாகும் அவலம்

வேலூர்: வேலூர் கோட்டை அகழியில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கோட்டை பாசி படர்ந்து பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோட்டையை சுற்றி பார்ப்பதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கும் அதிகளவிலான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் வேலூர் கோட்டை எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த ெதாடர் மழைகாரணமாக, கோட்டையை சுற்றியுள்ள அகழியில் நீர்மட்டம் அதிகரித்தது. இதனால் அகழியில் இருந்து கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதற்கிடையே கலெக்டர் ஆய்வு செய்து, மழைநீர் வெளியேறும் கால்வாய் உள்ள புதிய மீன்மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அகழியில் உள்ள தண்ணீர் மின்மோட்டார் மூலம் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கோட்டை அகழியில் இருந்து தண்ணீர் வெளியேறும் மீன்மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், கம்பீரமாக காட்சியளித்த கோட்டை பாசி படர்ந்து பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் தேங்கிய தண்ணீர் வெளியேறாததால் பக்தர்கள் சுமாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, வேலூர் மீன்மார்க்கெட் பகுதியில் கோட்டை அகழிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை பாதுகாக்க தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், சுற்றுலா ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Jalakandeshwara Temple , Jalakandeswarar Temple, Devotees
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...