மேலூர் அருகே பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்; மாணவர்கள் அவதி

மேலூர்: மேலூர் அருகே மழையால் கண்மாய் நீர் நிரம்பி, அருகில் உள்ள அரசு பள்ளிக்குள் பாய்ந்ததால், பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலூர் அருகில் உள்ள கொடுக்கப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள கண்மாய், தொடர் மழையால் நிரம்பி வெளியேற துவங்கியது. இத்தண்ணீர் அருகில் உள்ள இப்பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குள் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

பின்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், 10ம் வகுப்பு மாணவர்களை மட்டும், அருகில் உள்ள தொடக்க பள்ளிக்கு அழைத்து சென்று பாடம் எடுத்தனர். மற்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதிகாரிகள் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: