இந்தோனசியா ஓபன்: அரையிறுதியில் சிந்து ஏமாற்றம்

பாலி: இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுயில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து போராடி தோற்றார். அரையிறுதியில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானுடன் (26வயது, 8வது ரேங்க்) மோதிய சிந்து 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அபாரமாக விளையாடிய ரட்சனோக் 15-21, 21-9, 21-14 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். கடந்த வாரம் இதே பாலித் தீவில் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் அரையிறுதியில் தோல்வியைத் தழுவியிருந்த சிந்து, மீண்டும் அரையிறுதியுடன் வெளியேறியது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

Related Stories: