காலி மனைகளில் தேங்கியுள்ள நீரில் ஆயில் பந்து வீசி கொசு ஒழிப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காலி மனைகளில், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்குவது வாடிக்கையா உள்ளது. இதில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கொசு மருந்து புகை அடித்தாலும் கொசுக்களை ஒழிக்க நிரந்தர தீர்வு காண முடியவில்லை. இந்நிலையில், சென்னையில் கடந்த வாரம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், காலி மனைகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில், காலி மனைகளில் குளம்போல் தேங்கியுள்ள நீரில் ஆயில் பந்துகளை வீசி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தரமணி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் காலி மனைகள் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது. எனவே இங்கு கொசுகள் உற்பத்தி ஆகாத வகையில் மஸ்கிட்டோ லார்வா சைட் ஆயில் பந்துகள் வீசப்படுகிறது. இதுபோன்று சென்னை மாநகராட்சிக்குப்பட்ட 15 மண்டலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Related Stories: