தி.மலை கோயிலுக்கு வந்த ‘மாடர்ன்’ பெண் சாமியார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தஞ்சாவூரை சேர்ந்த பவித்ரா காளிமாதா மாடர்ன் உடையில் வந்து சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா காளிமாதா. இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பவித்ரா காளிமாதா நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்து விட்டு வெளியே வந்த போது, கோயிலில் இருந்த பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். உதடுகளில் சாயம் பூசியும், ஆடம்பர நகைகளையும் அணிந்து மாடர்ன் உடை என கலக்கலாக வந்த பவித்ரா காளிமாதாவை பக்தர்கள் வியப்பில் பார்த்தனர்.

Related Stories: