முதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்: 5 விக்கெட்களை வீழ்த்தி அக்ஸர் படேல் அசத்தல்

கான்பூர்: கான்பூரில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அக்சர் படேல் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய  நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்  57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் கில் 52, ஐடேஜா 50, அஸ்வின் 38, கேப்டன் ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

Related Stories:

More