×

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பெருநகர போக்குவரத்து காவல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்;


1.    நீர் தேங்கியுள்ள சாலைகள் மற்றும் மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் :-

i.    ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை - போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

ii.    மேட்லி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி உள்ளதால்- போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

iii.    கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது.

iv.    வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

v.    வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

vi.    சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

vii.    மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டடுள்ளது, மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

viii.     துரைசாமி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கியுள்ளதால் - போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

ix.    கணேஷபுரம் சுரங்கப்பாதை மழைநீர் தேங்கியுள்ளதால் - போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

x.    சர்தர் வல்லபாய் படேல் சாலையில் இருந்து ராஜ்பவன் வரை மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Tags : Chennai , Current situation of vehicular traffic in Chennai ahead of the northeast monsoon
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...