×

வட இந்திய மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடையும் : மத்திய அரசு!!

டெல்லி : வட இந்திய மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து டிசம்பர் மாத ஆரம்பத்திலேயே தொடங்கும் என்றும் இதன் காரணமாக வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

டிசம்பரில் தக்காளி வரத்து கடந்த வருடத்தைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த பருவம் தவறிய மழை காரணமாக தக்காளி பயிர் மற்றும் இம்மாநிலங்களில் இருந்து செய்யப்படும் தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டதால், 2021 செப்டம்பர் இறுதியில் இருந்து தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது.

வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாகவும் தக்காளி பயிர் மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டன.

2021 நவம்பர் 25 நிலவரப்படி, தக்காளியின் அகில இந்திய சராசரி விலை ரூ 67/கிலோ ஆகும். இது கடந்த ஆண்டை விட 63% அதிகம். விநியோக சங்கிலியில் ஏற்படும் சிறிய இடையூறுகள் அல்லது கனமழை காரணமாக சேதம் ஏற்படுவதால் விலை ஏற்றம் ஏற்படுகிறது.

வட இந்திய மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து டிசம்பர் மாத ஆரம்பத்திலேயே தொடங்கும். இதன் காரணமாக வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். டிசம்பரில் தக்காளி வரத்து கடந்த வருடத்தைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெங்காயத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் 2021-ல் விலை உயர்வு கணிசமாகக் குறைந்துள்ளது, மேலும் 2020 மற்றும் 2019-ல் இருந்த சில்லறை விலையை விடக் குறைவாக உள்ளது. 2021 நவம்பர் 25 அன்று வெங்காயத்தின் அகில இந்திய சராசரி சில்லறை விலை ரூ 39/கிலோ ஆகும். இது கடந்த ஆண்டை விட 32% குறைவு.

இவ்வாறு தெரிவித்துள்ளது

Tags : North Indian , மத்திய அரசு
× RELATED உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் காயம்!