×

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: பாதிப்புகள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கின்றனர். குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடத்துள்ளது. கனமழை காரணமாக பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் இழப்புகளை சந்தித்துள்ளனர். நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் பவ்வேறு இடங்களில் மழை நீரி தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது. சென்னை நகர பகுதி மற்றும் புறநகர் பகுதியில் நேற்று ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள ஏரிகள் 90% முழு கொள்ளவை எட்டியுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலட்ர் விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Ravi ,Chief Minister ,Stalin , Rain, Tamil Nadu, Chief Minister MK Posted by Meeting
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...