மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுமா?...அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் பேட்டி

சென்னை: சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை இல்லாத அளவுக்கு தென் மாவட்டங்களில் மழை பெய்து இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகப்படியான மழை பெய்தது, காயல்பட்டினத்தில் 306 மிமீ, தூத்துக்குடியில் 266 மிமீ, திருச்செந்தூரில் 248 மிமீ மழை பெய்து இருக்கிறது. மாஞ்சோலை எஸ்டேட்டில் நேற்று முன்தினம் 20 செமீ மழை பெய்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு மழையாகும். இதனால் பாபநாசம் அணை மற்றும் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வருகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில்  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 109 இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் 9,903 பேர் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவு, படுக்கை வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறோம் என்றார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுமா? என கேட்கிறீர்கள். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்யவார்.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More