×

அரையிறுதியில் சிந்து

பாலி: இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்ரையர் பிரிவு அரையிறுயில் விளையாட,  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் கொரியாவின் சிம் யுஜின் (22 வயது, 54வது ரேங்க்) உடன் நேற்று மோதிய சிந்து (26 வயது, 7வது ரேங்க்), 14-21 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். தொடர்ந்து 2வது செட்டிலும் சிம் ஆதிக்கம் செலுத்திய நிலையில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்த சிந்து 21-19 என கைப்பற்றி சமநிலை ஏற்படுத்தினார். அதே வேகத்துடன் 3வது செட்டிலும் புள்ளிகளைக் குவித்து முன்னேறிய சிந்து 14-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 6 நிமிடங்களுக்கு நீடித்தது. இன்று நடைபெறும் அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டனானுடன் (26 வயது, 8வது ரேங்க்) சிந்து மோத உள்ளார். கடந்த வாரம் இதே பாலி தீவில் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரிலும் சிந்து அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Tags : Indus , Semi-final, pv sindhu
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...