×

பள்ளிப்பட்டு அருகே காட்டாற்று வெள்ளத்தில் நீர்வரத்து கால்வாயான சாலை: கிராம மக்கள் அவதி

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில்  பெய்த கன மழைக்கு நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.   குமாராஜிபேட்டை ஊராட்சி  மோட்டூர் செல்லும் சாலையில் மலையடிவாரத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த இருளர்கள் வசித்து வருகின்றனர். கன மழைக்கு மலைகளிலிருந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் கால்வாய்க்கு அருகில்  இருளர்கள் சென்று வர  அமைக்கப்பட்டிந்த தார் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சாலை நீர்வரத்து கால்வாயானது.

இருளர் குடும்பங்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சுழுந்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரவும் சாலை வசதி இன்றி தத்தளிக்கின்றனர். சாலைப் பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்ததால்  தெரு விளக்கு வசதியும் இன்றி இருளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மலைப் பகுதியில் அச்சத்துடன் வசித்து வருவதாக பெண்கள் வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக இருளர் காலனிக்கு  சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : Pallipattu , pallipattu , wild
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில்...