சுற்றுலா பயணிகள் வருகை குறைவு: மழையால் வெறிச்சோடியது கன்னியாகுமரி

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக, பல மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ெகாரோனா பரவல் கணிசமாக குறைந்தை தொடர்ந்து, தற்போது பொது மக்கள் சுற்றுலா தலங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் விடுமுறை நாள்கள் மட்டுமின்றி அனைத்து தினங்களிலும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

அவர்கள் கன்னியாகுமரி கடற்கரை, சுனாமி நினைவு பூங்கா, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, கடலில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்தது. இதனால் இவர்களை நம்பியுள்ள வியாபாரிகளும் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் மழை ெதாடர்ந்து ெபய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் இன்றி ெவறிச்ேசாடி காணப்படுகிறது.

ஆரோக்கியபுரம் முதல் மணக்குடி வரையிலான பகுதிகளில் உள்ள நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோல சின்னமுட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த 350க்கும் ேமற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக நேற்று முழுவதும்  திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை குறைந்த ேநரங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகுகள் இயக்கப்பட்டன. இன்றும் மழை நேரங்களில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. மழை ஓய்வெடுக்கும் நேரத்தில் படகுகள் இயக்கப்பட்டன. ஆனால் குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தது.

Related Stories: