×

நாசரேத் பகுதியில் தொடர் மழை: சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

நாசரேத்: நாசரேத் பகுதியில் காலையில் தொடங்கிய மழை மாலை வரை நீடித்தது. இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலை மற்றும் பள்ளி அருகிலும் தண்ணீர் தேங்கியது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி பகுதியில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.  இந்த மழை  இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம்  அறிவித்துள்ளது. இதையொட்டி நாசரேத் பகுதியில் நேற்று காலை 10 மணிக்கு பெய்ய துவங்கிய மழை மாலை வரை நீடித்தது. இதில் தாழ்வான பகுதியில்  மழை நீர் தேங்கியது. மேலும் மர்காஷிஸ் சாலை உள்ளிட்ட அருகாமையில் உள்ள பள்ளி பகுதியிலும் மழை நீர் தேங்கி நின்றது.

இந்த மழை காரணமாக காலை மின்தடை ஏற்பட்டது. இந்த மின் தடை மாலை வரை தொடர்ந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாசரேத் சுற்று வட்டார பகுதியிலும் கனமழை தொடர்ந்தால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.நாசரேத், நவ. 26- நாசரேத் பகுதியில் காலையில் தொடங்கிய மழை மாலை வரை நீடித்தது. இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலை மற்றும் பள்ளி அருகிலும் தண்ணீர் தேங்கியது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி பகுதியில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.  இந்த மழை  இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம்  அறிவித்துள்ளது.

இதையொட்டி நாசரேத் பகுதியில் நேற்று காலை 10 மணிக்கு பெய்ய துவங்கிய மழை மாலை வரை நீடித்தது. இதில் தாழ்வான பகுதியில்  மழை நீர் தேங்கியது. மேலும் மர்காஷிஸ் சாலை உள்ளிட்ட அருகாமையில் உள்ள பள்ளி பகுதியிலும் மழை நீர் தேங்கி நின்றது.  இந்த மழை காரணமாக காலை மின்தடை ஏற்பட்டது. இந்த மின் தடை மாலை வரை தொடர்ந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாசரேத் சுற்று வட்டார பகுதியிலும் கனமழை தொடர்ந்தால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.



Tags : Nazareth , Continued rain in Nazareth area: Water flooded the road
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்