தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட மாஜி போலீஸ் கமிஷனர் ஆஜர்

மும்பை: தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட, மும்பை மாநகர காவல் ஆணையர் பரம்பீர் சிங் காவல்துறை விசாரணைக்கு ஆஜரானார். மும்பை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் பரம்பீர் சிங், தன்னை மிரட்டி பணம் பறித்ததாக மும்பையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் புகார் தெரிவித்தார். இந்த வழக்கில் அவரை கைது செய்ய மும்பை காவல்துறை முயற்சித்தபோது தலைமறைவானார். தன்னை கைது செய்வதற்கு தடைக் கோரி பரம்பீர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் விலக்கு வழங்கிய நிலையில், பரம்பீர் சிங் நேற்று மும்பை குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வரும் 29ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறையினர் கூறினர். இதற்கிடையே, தன்னை தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் பரம்பீர் சிங் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: