மன்மோகன் சிங்கிடம் நலம் விசாரித்தார் சோனியா காந்தி

புதுடெல்லி: டெல்லியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மன்மோகன் சிங்கை, சோனியா காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்குக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல் திடீரென மோசமடைந்ததால், கடந்த அக். 13ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

ெதாடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் பெற்று கடந்த அக். 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் அவருக்கு உதவிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மன்மோகன் சிங்கின் மனைவி  குர்ஷரன் கவுர் நன்றியைத்  தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள மன்மோகன் சிங் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

Related Stories:

More