×

வேதா இல்லம் அரசுடைமை செல்லாது என்ற உத்தரவு அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு வார்டு துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வார்டை திறந்து வைத்து பேசியதாவது: இந்த சிறப்பு வார்டில் புதுக்கோட்டை பாஸ்டல் பள்ளியில் உள்ள சிறைவாசிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான சிகிச்சை  அளிக்கப்படும். தமிழகத்தில் சிறைச்சாலைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சிறைத்துறை பணியாளர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. புதிதாக சிறைக்கு செல்லும் கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன்பின் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு சிறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீடான வேதா இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது’ என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆஜராகியுள்ளார். அவரின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாக மதுரையை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.  தற்போது வழக்கு தொடர்ந்தவரே அதை வாபஸ் பெற்றுள்ளார். உரிய ஆதாரங்களை அரசிடம் சமர்ப்பித்தால் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் துறை ரீதியாக நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். சிறைத்துறையில் ஒதுக்கப்படும் நிதி அனைவருக்கும் தெரியும். அதனால் அந்தளவிற்கு ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது என்றார்.

Tags : Advocate General ,Vedha House ,Minister ,Raghupathi , Next step in consultation with Advocate General: Minister Raghupathi Interview
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...