தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
