திருச்சி துறையூர் பகுதியில் கனமழை: 16 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய துறையூர் பெரிய ஏரி

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலை பகுதியில் கனமழை காரணமாக 16 வருடங்களுக்கு பிறகு  துறையூர் பெரிய ஏரி நிரம்பி பாலக்கரை வழியாக ஆறுபோல் ஓடுகிறது. துறையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் துறையூர் சுற்றுவட்டார ஏரிகள் நிரம்பின. இதன் காரணமாகவும்  கனமழை காரணமாகவும் துறையூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில்  நள்ளிரவில் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியது.  அதிகாலை நிரம்பி வழிந்தது. அதிக நீர்வரத்து காரணமாக வழிந்து வரும் நீர் பாலக்கரை பகுதி குடியிருப்பு மற்றும் சாலைகளில் நீர் புகுந்தது. 16 வருடங்களுக்கு பிறகு பெரிய ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Related Stories:

More