மணப்பாறை அருகே வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற கோரிகொட்டும் மழையில் மக்கள் சாலை மறியல்

மணப்பாறை : மணப்பாறை அருகே வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் குடையுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம் .மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோயில் அருகேயுள்ளது ஆட்டோ நகர். இங்கு 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள குளத்து நீரை சிலர் திறந்து விட்டதால், ஆட்டோ நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

அத்துடன், தேங்கியுள்ள மழை நீரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று மாலை ஆண்டவர் கோயில் அருகே திருச்சி-திண்டுக்கல் சாலையில் 50க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி குடும்பத்தினருடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வீடுகளை சூழ்ந்துள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: