×

ஜோலார்பேட்டையில் உள்ள ரயில் நிலையம், ரயில்வே மேம்பாலங்கள், தரைப்பாலம் பகுதிகளில் எம்பி ஆய்வு-அடிப்படை வசதிகளுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் உள்ள ரயில் நிலையம், ரயில்வே மேம்பாலங்கள் தரைப்பாலம் போன்றவற்றை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை நேற்று ஆய்வு மேற்கொண்டார்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜோலார்பேட்டை ஒன்றியம், கட்டேரி ஊராட்சி, பக்கிரிதக்கா பகுதியில் பக்கிரிதக்கா- கட்டேரி பகுதியை இணைக்கும் ரயில்வே தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனால் இரு பகுதியிலிருந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் துறை அதிகாரிகள் மூலம் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நிரந்தர தீர்வு காண பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ தேவராஜி, மாவட்ட சேர்மன் என்டிஆர் சூரியகுமார் ஆகியோர் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி ஜோலார்பேட்டை பகுதியில் தரைப்பாலம் மேம்பால பணிகள் ரயில் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டப்பணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் கடும் அவதி ஆகி வருகின்றனர்.

இதுகுறித்து எம்பி சி.என் அண்ணாதுரைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் நேற்று பக்ரிதக்கா பகுதியில் உள்ள ரயில்வே தரை பாலத்தையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிலைய அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் ரயில்வே பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

அப்போது திருப்பத்தூர் ரயில் நிலையம் லிப்ட் வசதியுடன் நவீன ரயில் நிலையமாக தரம் உயர்த்த நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி நடைபெற உள்ளது. மேலும் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜோலார்பேட்டையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும், திருப்பத்தூரில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்ல ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நவீன ரயில் பழுது பார்க்கும் கூட்ஸ்ஷெட் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். இதனையடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவைகள் குறித்து அதாவது கழிவறை வசதி, தண்ணீர் வசதி, மேற்கூரை, ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களில் தரை வசதிகள் ஆகியவை இருக்க வேண்டும். இது போன்ற வசதிகள் குறைவாக இருப்பது தெரியவருகிறது. இதனால் அடிப்படை தேவையான வசதிகள் குறித்து திட்ட அறிக்கையை தயார் செய்து உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ஜங்ஷன் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் ரயில் நிலைய நுழைவாயில் நுழைந்து வெளியே செல்ல ரயில்வே நிர்வாகத்திடம் பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும் பாலங்களில் ஆங்காங்கே மழை காலங்களில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி நீரை அகற்ற ரயில்வே வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்று வரும் ஜோலார்பேட்டை- இடையம்பட்டி பகுதிகளை இணைக்கும் மேம்பால பணிகளையும், கேத்தாண்டப்பட்டி - சின்னமோட்டூர் பகுதிகளை இணைக்கும் ரயில்வே தரைப்பாலத்தையும், ஜோலார்பேட்டை ஒன்றியம், வெலக்கல்நத்தம் பகுதியில் அமைந்துள்ள செட்டேரி அணையும் திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான  க.தேவராஜி, திருப்பத்தூர் மாவட்ட சேர்மன்  என்.கே.ஆர்.சூரியகுமார், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் ம.அன்பழகன், தேர்தல் பொறுப்பாளர் டி.எம்.கதிரவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி. வடிவேல், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.எஸ். பெரியார்தாசன் உட்பட ரயில்வே துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர்  உடன் இருந்தனர்.

Tags : Jolarpet , Jolarpettai: The railway station at Jolarpettai, railway overpasses, ground bridge, etc. Thiruvannamalai Parliament
× RELATED ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத...