கிருஷ்ணகிரி அருகே தினம் தினம் ஆபத்தான முறையில் பாய்ந்தோடும் ஆற்றில் இறங்கி செல்லும் கிராம மக்கள்.!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஆபத்தான முறையில் தினம் தினம் பாய்ந்தோடும் ஆற்றில் இறங்கி செல்லும் கிராம மக்கள். கர்பிணி பெண்கள் முதல் பள்ளி மாணவ மாணவிகள் வரை கடும் அவதி பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள இனாம் குட்டப்பள்ளி கிராமத்திற்கு கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக  தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் தினம் தினம் பாய்ந்தோடும் ஆற்றில் ஆபத்தான முறையில் ஆற்றை கரையை கடந்து செல்வதால் அவதிப்படும் கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் குட்டப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் படித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வேப்பனப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த கிராமத்திற்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைமேம்பாலம் சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் தினம் தினம் ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி பாய்ந்தோடும் நீரில் ஆபத்தான முறையில் கரையை கடந்து சென்று வருகின்றனர். பள்ளி மாணவ,மாணவிகள்,  கல்லூரி மாணவர்களும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் முதல் இவற்றில் கடந்து செல்வதால் மிகுந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் கர்பணி பெணகளுக்கு ஆம்பிலன்ஸ் கூட வர முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தண்ணீரின் அளவு அடிக்கடி அதிகமாக இருப்பதால் சில நேரங்களில் கரையை கடக்க முடியாமல் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.தற்போது கயிரை கட்டி கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி கடந்து சென்று வருகின்றனர். ஆண்டுதோறும் இதுபோன்று மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வரும்போது கிராம மக்கள் கரையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Related Stories: