கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

சென்னை: கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி முதலமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் தகவல் அளித்துள்ளார். மழையால் மீண்டும் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தேவைப்பட்டால் ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்படும்.

Related Stories: