×

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழை பெய்யும். நாமக்கல், கரூர், திருவள்ளூர், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி 27 செ.மீ, திருச்செந்தூர் 25 செ.மீ. நாகை 19, ஸ்ரீவைகுண்டம் 18, குலசேகரபட்டினம் 16, வைப்பாறில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags : Tamil Nadu ,southwestern Bay of Bengal , Red Alert
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...