×

வரலாற்றில் இதுவே முதல் முறை.! ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்

சிட்னி: ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஸ்டீவ் ஸ்மித்தை துணை கேப்டனாக நியமித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியபோது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அப்போதைய டெஸ்ட் கேப்டன் ஸ்மித் பதவி விலகினார். புதிய டெஸ்ட் கேப்டனாக, டிம் பெய்ன் கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பெண் ஊழியர் ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகார் பரபரப்பை கிளப்பியது. இந்த விவகாரம் வெளியில் வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் டிம் பெய்ன். இதையடுத்து புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருடைய பெயரை சிபாரிசு செய்துவந்தனர். வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், முன்னாள் கேப்டன் ஸ்மித் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இந்நிலையில் பேட் கம்மின்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 47 வது கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 8 ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. பரபரப்பான இந்த தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்நிலை யில் பேட் கம்மின்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை. ‘பெரிய ஆஷஸ் தொடருக்கு முன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Pat Cummins ,Australian ,Test cricket , This is the first time in history! Pat Cummins appointed captain of the Australian Test cricket team
× RELATED இந்த போட்டியில் சில அற்புதமான...