×

ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு எல்ஐசி சார்பில் பாராட்டு விழா

சென்னை: எல்ஐசி சார்பில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் வெற்றியாளர்களுக்கு அவர்களது சொந்த ஊரில் பாராட்டுவிழா நடத்தப்பட்டு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. சமீபத்தில் முடிவடைந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்திய விளையாட்டு வீரர்களின் செயல்திறன் உண்மையில் பாராட்டத்தக்கது. ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றதன் மூலம் தேசம் அதன் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்தது. வீரர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் 4வது இடத்துக்கு முன்னேறி, வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் வீரர்களின் சொந்த ஊர்களில் எல்ஐசி சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, எல்.ஐ.சி., மூத்த பிரமுகர்களால், வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

மேலும் டோக்கியோ பாராலிம்பிக்கிலும் இந்திய வீரர்களின் செயல்திறன் பிரமிக்க வைத்தது. இது வருங்கால சந்ததியினருக்கு உத்வேகமாக அமையும். 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உட்பட 19 பதக்கங்களுடன் தேசம் அதன் சிறந்த செயல்திறனை பதிவு செய்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களை கவுரவிப்பதைப் போன்றே பாராலிம்பிக் வெற்றியாளர்களை கவுரவிக்கும் வகையில் பதக்கம் வென்ற 19 வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கியது மட்டுமல்லாமல், 4வது இடத்தை பிடித்த 7 வீரர்களையும் பாராட்டி அவர்களது சொந்த ஊர்களில் நேற்று நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு எல்ஐசி சார்பில் கவுரவிக்கப்பட்டது.

Tags : LIC ,Olympic , Olympic, LIC, Appreciation Ceremony
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...